சென்னை டி நகர் தணிகாசலம் சாலையில் அக்காடு மேல்நிலைப் பள்ளியை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெகத்ரட்சகன் அவரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் இயக்குனர் ஸ்ரீ ரஷிகா, ஸ்வேதா மலர் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியின் சிறப்பம்சமாக வகுப்பறையில் ஐந்து மாணவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ மாணவியர்களின் நலன் மற்றும் தனித்திறமைகள் வெகுவாக வெளிப்படும் சூழல் இந்த பள்ளியின் அமைப்பில் வழிகாட்டுதலில் கலந்துள்ளது.
மகிழ்ச்சியான இந்நிகழ்வில்அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் திட்ட இயக்குநர் திருமதி மெர்லானிராம், கல்வி ஆலோசகர் திருமதி சுதா மகேஷ் மற்றும் பாண்டிசோரி சுற்றுச்சூழல் தலைவர் திருமதி மதானி அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்காடு குழுமத்தில் கூடிய விரைவில் சென்னை டி நகர் உள்ள அக்காடு மேல்நிலைப்பள்ளி போல சேலையூர் மற்றும் புதுச்சேரியில் மேல்நிலைப்பள்ளிகள் துவங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது